视频说明
அமெரிக்கா மற்றும் இரான் இடையே மீண்டும் வான்வெளித் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. இரு தரப்பும் ஹோர்மூஸ் நீரிணை அருகே உள்ள ராணுவ இலக்குகளைத் தாக்கியதாகக் கூறின. அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையமான செண்ட்காம் இது தொடர்பாக கூறும்போது , “இரானின் கோருக் (Goruk) மற்றும் கெஷ்ம் தீவு (Qeshm Island) பகுதிகளில் உள்ள ரேடார் அமைப்புகள் மற்றும் ட்ரோன்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மீது தற்காப்பு நடவடிக்கையாக தாக்குதல் நடத்தப்பட்டது” என தெரிவித்தது. மறுபுறம், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, பதிலடி நடவடிக்கையாக அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய ஒரு விமானத் தளத்தைத் தாக்கியதாகக் கூறியது. ஆனால், இந்த தாக்குதல் எங்கு நடத்தப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை.
#America #IranWar #Trump
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil