影片說明
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுவெளியில் ஏற்பட்ட அரிதான எதிர்ப்பாக 4 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து இதில் வாக்களித்துள்ளனர்.
கடந்த முறை இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஜனநாயக கட்சி உறுப்பினரான ஜேரட் கோல்டன் இந்த முறை ஆதரவாக வாக்களித்தார்.இதனால் டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளை உண்மையிலேயே தடுக்க முடியுமா? இந்த வாக்கெடுப்பில் என்ன நடந்தது?
#Trump #USIranwar #Iran
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil