影片說明
minister aadhav arjuna visited nehru stadium
சென்னை: நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு
பொதுப்பணித்துறை, விளையாட்டுத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்று காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். அமைச்சர்களுக்கு துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், பொதுப்பணித்துறை, விளையாட்டுத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நேரு ஸ்டேடியத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர், வீராங்கனைகளிடம் அவர் கலந்துரையாடினார்.